இஸ்ரேல் வர்த்தகப் பிரமுகர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேல் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (09) இஸ்ரேல் வர்த்தக பிரமுகர்களை ஜெரூஸலத்தில் சந்தித்து இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் வர்த்தக தற்போது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகப் பிரமுகர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் விவசாயம், பால் உற்பத்தி, நீர்ப்பாசனம், தேயிலைப் பயிர்ச் செய்கை மற்றும் தொலைதூரக் கல்வி ஆகிய துறைகளில் அதிக முதலீட்டு வாய்ப்புக்கள் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment