ஆர்ப்பாட்டத்தில் இணைந்தார் அமைச்சர் விமல் வீரவன்ச!
போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ரேப்பை வெளியேற்றுமாறு வலியுறுத்தி அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது இணைந்துள்ளார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் அதிகமான பௌத்த பிக்குமார் கலந்து கொண்டுள்ளனர்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்கா முற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment