அரச, தனியார் ஒன்றிணைந்த பஸ் சேவையை ஜனாதிபதி இன்று ஆரம்பித்தார்!
மேல் மாகாண சபை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 'ரன் மக பாய' பிரதான செயலகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) திறந்துவைத்தார்.
பஸ் பிரயாணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த பஸ் சேவையையும் ஜனாதிபதி இந்த செயலகத்தில் இருந்து ஆரம்பித்துவைத்தார்.
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இருவருக்கு இரு மீட்டர்களையும் சுய தொழில் முயற்சியாளர்கள் இருவருக்கு இரு டிமோ லொரிகளையும் ஜனாதிபதி வழங்கினார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, விமல் வீரவன்ச மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களும் உயர் அதிகாரிளும் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment