பி.பீ.ஜி.கலுகல்லவின் நினைவாக உருவச்சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
கேகாலை மக்களுக்காக சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் பி.பீ.ஜி.கலுகல்லவின் நினைவாக கேகாலை நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான அவர், அமைச்சரவை அமைச்சர், தூதுவர், மற்றும் உயர்ஸ்தானிகராக செயறலாற்றியவராவார்.
அத்துடன் கேகாலை நகரில் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக 3600 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வெளிசுற்றுப்பாதையும்,
சுமார் 7 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கேகாலை அம்பன்பிற்றியவில் உள்ள டோசன் மாளிகையும் ஜனாதிபதி இன்று திறந்துவைத்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment