சிறுவர் வைத்தியசாலைக்கு ஸ்கேன் இயந்திரம் அன்பளிப்பு!
கொழும்பு சீமாட்டி லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 200 மில்லியன் ரூபா பெறுமதியான MRI ஸ்கேன் இயந்திரமொன்றை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ இதனை நேற்று (21) வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளித்தார்.
இந்த சிறுவர் வைத்தியசாலைக்கு ஸ்கேன் இயந்திரம் ஒன்று இல்லாத காரணத்தால் இதுவரையில் சிறுவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலை அல்லது பேராதனை போதனா வைத்தியசாலை என்பவற்றுக்கே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment