மட்டு. மீனவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகள் விநியோகம்!
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
இது தொடர்பில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்துக்கு உதவிப்பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச் தலைமை வகித்தார்.
சிரேஷ்ட கடற்றொழில் பரிசோதகர் ஜே.ஏ.இ.எக்ஸ்.ராஜ்குமார், கடற்றொழில் பரிசோதகர்களான பி.மனோகரன், ரி. அமிர்தலிங்கம் ஆகியோரும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 350 மீனவர்களுக்கு உயிர் காப்பு அங்கிகள் வழங்கப்படுகின்றன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மீனவர் ஒருவருக்கான காப்புறுதிப்பணமும் இன்று வழங்கப்பட்டது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment