இஸ்ரேல் சென்றடைந்தார் ஜனாதிபதி!
மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) காலை இஸ்ரேல் சென்றடைந்தார்.
இஸ்ரேல் மற்றும் இலங்கை சிறுவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் ஜெரூஸலத்தில் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
ஜோர்தான் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை முடித்துக் கொண்ட ஜனாதிபதி இறுதியாக தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேலிய ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment