மட்டக்களப்பு பொங்கல் விழாவில் பிரதமர்!
மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (14) நடைபெற்ற பொங்கல் விழாவிலும் விசேட பூசையிலும் பிரதமர் டி,எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபருட்பட அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
சிறார்களின் கலைநிகழ்வுகளும் அரங்கோற்றப்பட்டன. பார்வை குறைந்தவர்களுக்கு 1500 மூக்குக்கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
லேக்கவுஸ் நிறுவனத்தினால் குட்டிசுட்டியெனும் சிறுவர் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment