![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge9ftm6h6cLmQ-__rzLn-3oozdF3hq0F-w6aEEhI8CkaDd1OieJFzijaslUHN1uGPdUZcS90FjNiiYsW7Owcw_Uyik1alDPekv2GcwrqLDvfebojLOctp2zCW7LeyL9mE7rstNQA3hPIeV/s1600/in-sl-ship.jpg)
இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை காலை சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால் இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெற விருந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment