அவுஸ்திரேலிய பிரதமரின் விசேட பிரதிநிதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு!
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்டின் விசேட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் ஜிம் மொலொன் இலங்கை கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பேகவை நேற்று சந்தித்தார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடடிக்கைகளை தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என மேஜர் ஜெனரல் ஜிம் நன்றி தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜிம், அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment