விசாரணைகள் இன்று முதல் வடக்கில் ஆரம்பம்!
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அதன் விசாரணைகளை இன்று முதல் வடக்கில் ஆரம்பித்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஸ்கந்தபுரம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரக்ரம பரங்கம, ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சுரண்யனா வித்யவத்னே, மனோ ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன.
இன்றைய விசாரணைக்கு ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 35 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment