மட்டு. மேற்கு வலயக் கல்விப் பணிமனைக்கு புதிய கட்டடம்!
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிமனைக்கான புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக்காவினால் திறந்துவைக்கப்பட்;டது.
கிழக்கு மாகாண மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் குறிஞ்சாமுனையில் 10 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாண சபை உறுப்பினருமாகிய எஸ்.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், பிளான் ஸ்ரீ லங்கா வதிவிடப் பிரதிநிதி எட்வேர்ட் ரி எஸ்பே, மீள்குடியேற்ற அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பேரின்பதலர் மோகனதாஸ், பிரதேச செயலாளர் வெ.தவராஜா மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment