ஹிருனிகாவுக்கு நியமனக் கடிதம் வழங்கினார் ஜனாதிபதி!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) வழங்கினார்.
அலரி மாளிகையில் இது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிருவாக செயலாளர் எஸ்.எச். ஆரியசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment