Friday, January 24, 2014

அமெரிக்காவை சமாதானப்படுத்த லலித் வீரதுங்க வொஷிங்டன் பயணம்!

அமெரிக்காவை சமாதானப்படுத்த லலித் வீரதுங்க வொஷிங்டன் பயணம்!



மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, திடீரென அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.



ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக லலித் வீரதுங்க ஜெனிவா சென்றிருந்தார்.

நேற்று அவர் அங்குள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில், அவர் திடீரென வொஷிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டனில் அவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் செனெட் உறுப்பினர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் நேற்று திடீரென யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் சுமார் 3 மணிநேரம் வரை பேச்சு நடத்தியதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment