ஜனாதிபதி இன்று காலை நாடு திரும்பினார்!
மூன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை காலை நாடு திரும்பினார்.
ஜோர்தான், பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற ஜனாதிபதி அந்த நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான கமலா ரணதுங்க. ரொஷான் ரணசிங்க, ஜோன் அமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளார் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment