தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையைத் திறந்து வைத்தார்.
அத்துடன் முதல் புற்றுநோயாளி ஜனாதிபதியால் பதிவு செய்யப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் ஜனாதிபதி வைத்தியசாலயைச் சுற்றிப் பார்வையிட்டார்.
மாத்தளை தொடக்கம் யாழ்.பருத்துறை வரையான நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் இந்த புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புற்று நோய் புதிய சிகிச்சை கூடம் அமைப்பதற்கான அத்திவாரக் கல்லையும் ஜனாதிபதி நட்டினார்.
இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், விஜயகலா மகேஸ்வரி, ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமசிங்க, ருவான் விஜேவர்த்தன ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment