Monday, December 9, 2013

சுனாமி வீடமைப்புத் திட்டத்துக்கு ஐந்து கோடி ரூபா ஒது்க்கீடு.


சுனாமி வீடமைப்புத் திட்டத்துக்கு ஐந்து கோடி ரூபா ஒது்க்கீடு.



சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்மைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக 5 கோடி ருபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Displaying hisbullah-2.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் நகருக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Displaying hisbullah-1.jpg

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்மைப்பு தேவைகள் குறித்து ஆராய்ந்தார்.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோருடன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment