எட்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையில் நேற்று (15) எட்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாத்திடப்பட்டன.
நைரோபி நகர அரச மாளிகையில் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
உல்லாசப் பிரயாணம், கலாசார ஒத்துழைப்பு, விளையாட்டுத் துறை ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டு உள்ளவர்களை விஸா பெறுவதில் இருந்தும் விடுவித்தல், இருதரப்பு வர்த்தகம் பொருளாதாரம், வாணிபம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இருதரப்பு ஆலோசனை விசாரணைகள், ஒருங்கிணைந்த ஆணைக்குழு ஸ்தாபிதம் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment