சூழல் அழகுபடுத்தும் பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!
கிழக்கு மாகாணத்தில் தேசிய வைபவங்களை நடத்துவதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றுவரும் அழகுபடுத்தும் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
சர்வதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை ஒத்தகோணத்திலும் அதையும் விட அழகில் பிரமிக்க வைக்கும் வகையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளை தமது நிதியொதுக்கீட்டில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் தலைமையில் கிழக்க மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இப்பகுதியை பார்வையிட்டனர்
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment