இது ஒரு பேய் வண்டியா?
கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி சாரதி எவருமின்றி ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரும் மர்மம் நீடிக்கின்றது.
ஏனெனில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று இதே போன்ற தினத்தில்- அதாவது 1813 ஆம் வருடம் டிசம்பர் 5ஆம் திகதி அதிகாலை 1.45 மணிக்கு நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அன்று நடந்த சம்பவத்தை அப்போது மூன்று சதத்திற்கு விற்பனையான லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமின’ பத்திரிகை முன்பக்கச் செய்தியாக வெளியிட் டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மர்மான சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 1.45 இற்கு இடம்பெற்றி ருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித் துள்ளனர்.
ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் இடம் பெற்ற சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் இந்தத் தகவல் புகையிரத சேவையைச் சேர்ந்த மூத்த ஊழியர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது.
1913 ஆம் ஆண்டு சம்பவமானது, மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின் ஒன்று தானாக இயங்கி களனிவெலி ரயில் பாதையில் மாளிகாவத்தை, மருதானை, நிலையங்களைக் கடந்து கொழும்பு கோட்டை திசை நோக்கி சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் பயணித்து கப்பிதாவத்தை இந்து ஆலயம் வரை வந்து தரித்திருக்கின்றது.
இந்தச் சம்பவத்திலும் எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை.
முதன்முதலாக சாரதி இல்லாமல் 100 வருடத்துக்கு முன்னர் சென்ற புகையிரதம் சுமார் 3.5 மைல் பிரயாணம் செய்திருக்கின்றது. கடந்த வாரம் சாரதி இல்லாமல் பிரயாணித்த புகைவண்டி சுமார் 15 கிலோ மீற்றர் வரை பயணித்திருக்கின்றது.
100 வருடங்களின் பின்னர் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த ஆச்சரியத்தக்க சம்பவம் நடைபெற்றி ருப்பதாவது சகலரையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment