Tuesday, December 17, 2013

விளக்கம் கோருகின்றது ஐ.ம.சு. முன்னணி!

விளக்கம் கோருகின்றது ஐ.ம.சு. முன்னணி!
Displaying keheliya-R.jpg


வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதற்கான விசேட கூட்டம் இன்று (17) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 225 உள்ளூராட்சி மன்றங்களில் 200 மன்றங்களின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றியுள்ளது. அவற்றில் 8 உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தோல்வி கண்டுள்ளது. இது வெறும் மூன்று சதவீதம் மட்டுமேயாகும்.

அதிகாரப் போட்டி, பதவி ஆசை மற்றும் தலைமைத்துவத்தின் சர்வாதிகாரப் போக்கு என்பனவே இந்த வரவு செலவுத்தி்ட்ட தோல்விகளுக்கான காரணங்களாகும் எனினும். இந்த நிலையை மாற்றியமைக்கவே இன்று விளக்கம் கோரும் விசேட கூட்டம் நடைபெறுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment