ரியாழ் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு!
நேற்று மாலை காலமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச் செயலாரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான மௌலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம். ரியாழ் மௌலவி அவர்களின் ஜனாஸா இன்று (11) மாலை 4:00 மணிக்கு நீர்கொழும்பு பெரியமுல்லை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நீண்ட நாட்கள் சுகயீனமுற்றிருந்த இவர் தமது 82 ஆவது வயதில் நீர்கொழும்பில் உள்ள தமது இல்லத்தில் நேற்று (10) இரவு 7:15 மணிக்கு காலமானார்.
-எம்ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment