பாதுகாப்புச் செயலாளர் - யசூசி அக்காஷி சந்திப்பு!
இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காஷி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தரப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் ஜப்பானிய தூதுவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, யசூசி அக்காஷி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அக்காஸி எதிர்வரும் புதன் கிழமை வரையில் நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment