Monday, December 9, 2013

ஜனாதிபதி - அகாஷி சந்தித்துப் பேச்சு!

ஜனாதிபதி - அகாஷி சந்தித்துப் பேச்சு!

Displaying Akashi-1.jpg



இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி இன்று (09) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Displaying Akashi-2.jpg

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாகவும் ஜப்பான் இலங்கை நல்லுறவுகள் தொர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment