பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் மாப்பண்டங்களுக்குத் தடை!
பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் மாவினால் செய்த பண்டங்கள் மற்றும் இனிப்பு குளிர்பானங்கள் விற்பனை செய்வது அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான தினேஷ் குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் 2011 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வாய்மூல பதிலுக்காக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment