பிரதமரை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை!
-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல-
பிரதமரை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லையென தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (17) பிற்பகல் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது பற்றி அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில்-
ஹெரொயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் பிரதமரைத் தொடர்பு படுத்தி சில ஊடகங்கள் வெளியிடும் ஆதாரமற்ற தகவல்கள் ஏற்க முடியாது.
இந்தக் கடத்தல் சம்பவம் மிகவும் பாரதூரமானது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் நடத்தி வருகின்றது என்று கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment