இலங்கை யுத்தத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டேன்!
பான் கீ மூன் தெரிவிப்பு!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலிருந்து தான் பாடங்கள் கற்றுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட நிலைமையைப் போன்று வேறும் எந்த நாட்டிலும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருட இறுதியில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-
மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான ஓர் செயற் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட நாட்டையும் இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உலகின் எந்த ஓரு நாட்டிலும் இடம்பெறக்கூடிய முரண்பாட்டு நிலைமைகளின் போது காத்திரமான முறையில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment