ஜனாதிபதி நாடு திரும்பினார்!
கென்யாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று (16) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.
காலஞ்சென்ற நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
இதன்பின்னதாக கென்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இரு நாடுகளுக்கிடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
-எம்ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment