நைரோபி விஹாரையில் ஜனாதிபதி வழிபாடு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை காலை நைரோபிக்கு அருகாமையில் அமைந்துள்ள நைரோபி பெளத்த விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
தாது கோபுரம், தியான மத்திய நிலையம், பிக்குமார்களின் தங்குமடம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேரவாத பெளத்த விஹாரை பத்து வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விகாராதிபதி பன்டே விமல தேரர் அவர்களுக்கு அட்டபிரிகர பூஜைப் பொருட்களை வழங்கினார். கென்யாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாடினார். ஜனாதிபதியை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் விகாரைக்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஊவா மாகாண முதலமைச்சர் ஷiந்திர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலரும் பெளத்த விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment