Tuesday, December 10, 2013

நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி!




நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி!
Displaying HE-at-sa.africa.jpg

தென் ஆபிரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நேற்று (10) கலந்துகொண்டார்.

ஜொஹனஸ்பேர்க் என்ற இடத்தில் உள்ள எப்.என்.பி. மைதானத்தில் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்தர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு  பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் தென் ஆபிரிக்க விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment