2014 ஜனவரி முதல் நீதிமன்றங்களில் டி. என். ஏ. பரிசோதனை!
-அமைச்சர் ரவூப் ஹக்கீம்-
நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக கணனி தொழில்நுட்பத் தினூடாக நீதிமன்றங்களிடையே வழக்குகளை பரிமாறிக்கொள்ள உள்ளதாகவும் ஈ. பைலிங் முறையை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுவர்கள் மற்றும் இளம் குற்றவாளிகள் தொடர்பிலும் அடுத்த வருடத்தில் புதிய சட்டம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-
பொலிஸார் குரூரமாக சந்தேக நபர்களை தாக்கி அது தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கிற்கு ஆஜராகாதிருக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சர்வதேச விஞ்ஞாபனத்தில் கைச்சாத்திட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகுப்பாய்வுத் திணைக்களம் நவீனம யப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து டி. என். ஏ. சாட்சிகளை பெறும் நடவடிக்கையில் கால்பதித்துள்ளது.
பல குற்றங்களுடன் தொடர்புடைய சாட்சிகளை பெற டி. என். ஏ. பரிசோதனை பிரதானமாகும். 1390 மில்லியன் ரூபா செலவில் புதிய பகுப்பாய்வுத் திணைக்கள ஆய்வு கூடம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
2014 ஜனவரி முதல் நீதிமன்றங்களில் இருந்து வரும் டி. என். ஏ. பரிசோதனை தொடர்பான ஆய்வுகளை ஏற்று பரிசோதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளோம். இதனூடாக குற்றவாளிகளை மிகச் சரி யாக அடையாளங் காணமுடியும்
No comments:
Post a Comment