ரியாழ் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான மக்கள்!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச் செயலாரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான மௌலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம். ரியாழ் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (11) பிற்பகல் 4:00 மணியளவில் இடம்பெற்றது.
இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான அறிஞர்கள் உலமாக்கள் பொது மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
காமச்சோடை ஜும்மாப் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடைபெற்றது. அகில இலங்கை ஷரிஆ கவுன்சில் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உதவிச் செயலாளர் எம்.எஸ்எம் தாஸிம் மௌலவி ஆகியோர் ஜனாஸாத் தொழுகைக்கு முன்னர் உரையாற்றினர்.
நீர்கொழும்பு பெரியமுல்லை பொது மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment