பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலஎல்லை நீடிப்பு!
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின்
காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் எதிர்வரும் 2014 ஜூன் மாதம் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கே பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த தெரிவுக்குழுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment