தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழையுங்கள்!
-கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் வடமாகாண சபைக்கும் ஜனாதிபதி அழைப்பு-
நாட்டின் தேசிய நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை நிலை நாட்டும் வகையில் எமது நாட்டுக்கே உரிய தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (20) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் தீர்வு காண்பதை விடுத்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
இதற்ககு சம்பந்தன் எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற குழுவும், சீ. விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை உறுப்பினர்களும் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அத்தோடு 30 வருடம் நாட்டை சீரழித்த யுத்தம் மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்பதில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
எதிர்கால சந்ததியினருக்கு அமைதி சுபீட்சமுமான நாடொன்றை பெற்றுக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும்.
இது எமது நாடு. நாம் அனைவரும் எமது மக்களுக்காகவே செயற்பட வேண்டும். அதுவே எமது பொறுப்பும் கடமையுமாகும். என்றும் ஜனாதிபதி கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment