Tuesday, December 17, 2013

அரச- தனியார் பஸ்களுக்கு அடுத்த வருடம் முதல் ஒரே நேர அட்டவணை!

அரச- தனியார் பஸ்களுக்கு அடுத்த வருடம் முதல் ஒரே நேர அட்டவணை!
Displaying CTB -and-privat.jpg


அடுத்த வருடம் 2014  ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களை ஒரே நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதியளித்ததாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கொஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்-
நாடு முழுவதிலும் உள்ள 6 மில்லியன் பஸ் பிரயாணிகளின் ​தேவைகளை நிறைவு செய்ய 4314 இ.போ.ச. பஸ்களும் 17129 தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பிரயாணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கவும் போட்டிகளைத் தவிர்க்கவும் ஒரே நேர அட்டவணையில் சகல பஸ்வண்டிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி  முன்வைத்த இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment