பாகிஸ்தான் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு விஜயம்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் இன்று (20) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியதுடன் பாராளுமன்ற அமர்வினையும் சர்தார் அயாஸ் சாதிக் பார்வையிட்டார். பிரமுகர்கள் பதிவேட்டிலும் கைச்சாத்திட்டார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள அவர்
இலங்கை - பாகிஸ்தான் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்வார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment