முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் அகாஷியின் கவனத்திற்கு!
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகள் தொடர்பில் ஜப்பானின் விசேட துாதுவர் யசூசி அகாஷியின் கவனத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கொண்டுவந்தார்.
அமைச்சர் றிசாத் பதீயுதீனை யசூசி அகாஷி இன்று வெள்ளிக்கிழமை அவரது அமைச்சில் சந்தித்துப் பேசினார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதீயுதீன் தலைமையிலான பிரதி நிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போதே அமைச்சர் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விளக்கமளித்தார்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு போதுமான ஒத்துழைப்புக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்காமல் இருப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதே வேளை, கிழக்கில் 15 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான முஸ்லிம்களது காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடன் பேசிய போதும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஜப்பானிய விசேட துாதுவரிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கான நல்லென்ன விஜயத்தின் வெளிப்பாடாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கருத்து பறிமாரல்களை செய்யும் போது இவ்விடயம் தொடர்பிலும் பேசுமாறும் அகாஷியிடம் கேட்டுக் கொண்டார்.
இவற்றுக்கு பதிலளித்த ஜப்பானிய விசேட துாதுவர் யசூசி அகாஷி இவ்விடயங்களில் ஜப்பான் தமது ஒத்துழைபை்பினை நல்கும் என்றும் இக்குழுவினரிடத்தில் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஜனுாபர், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment