பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் ஜகத் ஜெயசூரிய பதவியேற்றார்!
-எம்.ஜே.எம். தாஜுதீன்
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி உயர்த்தப்பட்ட ஜெனரல் ஜகத் ஜெயசூரிய கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப சூழலில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய அண்மையில் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டதோடு பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவியும் உயர்த்தப்பட்டார்.
இன்று காலை தமது காரியாலயத்தில் நடைபெற்ற சமய வைபவங்களைத் தொடர்ந்து உரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்த அவர் இப்பதவி தனக்கு வழங்கப்பட்டதற்காக ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்பட்ட முப்படை அணிவகுப்பு மரியாதையையூம் அவர் ஏற்றார். இந்த நிகழ்வில் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குடும்பத்தினர் உட்பட முக்கிய இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)
No comments:
Post a Comment