தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையாளராக ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. நியமனம்!
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லை முன்னிலையில் இவர் இன்று (27) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமது அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரை தமது அமைச்சுக்கு நியமித்தமை குறித்து தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த வைபவத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment