Thursday, August 8, 2013

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி நீர்கொழும்பில் பெருநாள் தொழுகை நடத்தினார்!

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி நீர்கொழும்பில் பெருநாள் தொழுகை நடத்தினார்!


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை 06:25 மணிக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பேருரையையும் நடத்தினார்.


இதற்கான ஏற்பாடுகளை நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் மேற்கொண்டனர்.


கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களின் சமூக ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டும் என அவர் தமது குத்பா உரையில் வலியுறுத்தினார்.


இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு மாற்றம் இல்லாத வகையில் ஏனைய சமூகத்தினருடன் இணங்கி வாழவும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment