அரசாங்க நிர்வாக சேவை பரீட்சையில் தமிழ்மொழி மூலம் சித்தியடைந்து ஒரு வருட பயிற்சியை முடித்துக் கொண்ட நிருவாக அதிகாரிகள் 43 பேர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சேவையில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் நேற்று(14) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment