ஜனாதிபதி ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு!
-எம்.ஜே.எம். தாஜுதீன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) காலை அச்சு மற்றும் இலத்திரனியயல் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பொறுப்பாளர்களையும் ஊடகவியாலளர்களையும் சந்தித்து உரையாடினார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேள்வியொன்றை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment