இரு கரங்களும் மற்றும் இரு கால்களும் ஒழுங்காக செயற்படாத நிலையில் தமது பெற்றோரின் தோள்களில் ஏறி தினமும் பாடசாலை சென்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவி கிசானி கல்ஹாரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடிக் கணனியொன்றைப் பரிசளித்தார்.
(கிசானி கல்ஹாரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மடிக் கணனியொன்றைப் பரிசளிப்பு)
குருநாகல் மாவட்டத்திலுள்ள பொல்பிதிகம தேசிய பாடசலை மாணவியான இவர் இன்று(07) அலரி மாளிகையில் தமது பெற்றோர் சகிதம் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல - ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க - பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment