பதிவு செய்யப்படாத இணையத்தளங்களின் தடைக்கு பொறுப்புக்கூறமுடியாது!
-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல-
தகவல் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க முடியாதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) தகவல் ஊடகத்துறை அமைசில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலலிளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-
இலங்கையில் இயங்கும் இணையத்தளங்களை எமது அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவை முடிவின்படி நாம் செய்துள்ளோம்.
அதற்கான முந்திய கட்டணங்களும் குறைக்கப்பட்டு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகளை இணையத்தளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அமைச்சில் பதிவு செய்துகொள்ளாத எத்தனையோ இணையத்தளங்கள் இலங்கையில் இயங்குகின்றன. அவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தினால் பொறுப்புக் கூறமுடியாதென்றும் அமைச்சர் கூறினார். (எம்.ரி.-977)
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment