Saturday, August 10, 2013

நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!



பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று நல்ல பெயர் வாங்கவேண்டும் என ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கினார்.


உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி ஹேனானிகல கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் ஜனாதிபதி நேற்று (09) ஹஸல நகரத்திற்கு விஜயம் செய்தபோதே இந்த மாணவர்களைச் சந்தித்தார்.

சகல மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கவேண்டும் என ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment