தமிழ் தேசிய கூட்டமைப்பpன் இரு உறுப்பினர்கள் ஆளும் கடசியில் இணைவு!
தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.
வடமாராச்சி தென்மேற்கு பிரதேச சபை உப தலைவரான ஈ. சந்தோஷபுரம் மற்றும் பருத்தித்துறையைச் பிரதேச சபை உப தலைவர் எம். லோகசிங்கம் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டவர்களாவர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ இசுசில் பிரேம ஜயந்த மற்றும் தொழில் சங்கத்தின் ஜனாதியின் இணைப்புச் செயலாளர் சுமித் விஜேசிங்க இஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாகச் செயலாளர் ஏ.ஆரியரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment