Friday, August 9, 2013

உலக ஆதிவாசிகள் தின வைபவத்தில் ஜனாதிபதி!


உலக ஆதிவாசிகள் தின வைபவத்தில் ஜனாதிபதி!

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி ஹேனானிகல கிராமத்தில் இன்று (09) நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ ஜனாதிபதியை வரவேற்றார்.

இவ்வைபவத்தின் போது ஆதிவாசிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வாழ்வாதாரப் பொதிகள் போன்றன ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன.


இந்த நாட்டில் ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ ஜனாதிபதிக்கு நினைவூப் பரிசு வழங்கினார்.



இந்த வைபவத்தில் அமைச்சர் பி. தயாரத்ன-கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க - கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment