Thursday, August 22, 2013

இன்னும் பத்து வருடத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும்!





இன்னும் பத்து வருடத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும்!

-இந்திய ஊடகவியலாளர் சங்கத்தலைவர் கருத்து-



இன்னும் பத்து வருட காலத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும் என இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பஸ்கர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏழு நாள் சுற்றுலாவை நிறைவு செய்த இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் (20) கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.


இந்தியாவின் 13 மாநிலங்களில் இருந்து இலங்கை வந்த 32 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கண்டி- காலி- நுவரெலியா- மாத்தளை- திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா மோற்கொண்டு  அப்பிரதேசங்களில் பொதுமக்களைச் சந்தித்து தகவல்கள் அறிந்துகொண்டனர்.

அவர்கள் நாடு திரும்பு முன்னர் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பஸ்கர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:

எந்தவொரு ஆசிய நாட்டிலும் காணமுடியாத துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை இலங்கையில் கண்டோம்.

நகரங்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு அவை தூய்மை மிக்க நகரங்களாக உருவாக்கப்படுகின்றன.

வடக்கில் வாழும் பொது மக்களைச் சந்தித்து அங்குள்ள உண்மையான நிலைவரங்களை அவர்கள் மூலம் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

அன்று வடக்கில் அடிமைகள் போன்று அச்ச உணர்வுடன் வாழ்ந்த மக்கள் இன்று சுத்திரமாகச் செயற்படுகின்றனர். சகல இன மக்களும் அங்கு புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர்.

இலங்கை உள்விவகாரங்களில் இந்திய அதிகாரிகள் தலையிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு நன்மதிப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய  ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர்  போதிய தெளிவில்லாத காரணத்தினாலும் தனிப்பட்ட இலாபங்களுக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள சிலர் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றார்.

தமிழ் நாட்டில் உள்ள 6 கோடி மக்களும் இந்திய சனத்தொகையில் 6 சதவீதத்தினர் மட்டுமே. தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவின் சகல மாநிலங்களும் இலங்கையின் நடைவடிக்கைகள் குறித்து திருப்தியடைந்துள்ளன என்றும் கூறினார்.

யுத்த காலத்தில் நாம் பட்ட துயரங்கள் போதும். இப்போது நாம் நிம்மதியாக உள்ளோம். இப்போது எங்களுக்கு மானியங்கள் தேவையில்லை. தொழில்களே ​வேண்டும். அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக நாம் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுவருகிறோம் என்றும் வடக்கு மக்கள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்தார்.

இந்திய உதவியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்ட அமைப்புப் பணிகளையும் வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளையும் நாம் பார்வையிட்டோம். அவை மிகவும் சிறப்பான முறையில் இயங்கிக்கொண்டிக்கின்றன என்றும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மேஸ்ரஸ்ரலும் தெரிவித்தார். (எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment