நீர்கொழும்பில் சமூக நல்லிணக்க இப்தார்!
(சுஜாயில் முனீர்)
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நீர்கொழும்பு பிரதேச செயலகத்தால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பெரியமுல்லை ‘சோன்டஸ் பெலஸ்’ மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச பௌத்த மக்கள் சார்பில் அங்குருகாரமுல்ல பௌத்த விகாராதிபதி கொந்தகங்மல்லே ஞானதிஸ்ஸ தேரர்-
கத்தோலிக்க மக்கள் சார்பில் அருள் தந்தை பெட்ரிக்-
ஹிந்து மக்கள் சார்பில் வெல்லவீதி சித்தி விநாயகர் கோயிலைச் சேர்ந்த கோணேஸ்வரக் குருக்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் ஏ.கே. ஆர் அலவத்த-
நீர்கொழும்பு பெரிய பள்ளிவால் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஹனிபா மௌலவி-
அஷ்ஷெய்க் அம்கஹர்தீன் மௌலவி
ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்.
No comments:
Post a Comment