மாநாட்டுக்கு தயாராகும் தாமரைத் தடாகத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்!
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ள தாமரைத் தடாக (நெலும் பொகுன) கலையரங்குக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) வெள்ளிக்கிழமை விஜயம் செய்து முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இக்கலையரங்கில் இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட 53 நாடுகளின் பிரதிநிதிகளும் கௌரவ அதிதிகளும் கலந்துகொள்வர்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வுகள் தொடர்பில் கலலைய உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment